ரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சினி மியூசிசியன்ஸ் தேர்தல் சென்னை வடபழனி யூனியன் அலுவலகத்தில் நடந்தது.

Advertisment

தலைவர் பதவிக்கு கல்யாணசுந்தரம், தினா இருவரும் போட்டியிட்டனர்.

dinaஅதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி- பி.ஜி. வெங்கடேஷ் இருவரும் போட்டியிட்டதில் சாரங்கபாணி வெற்றிபெற்றார்.

குருநாதன்- ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றிபெற்றார்.

Advertisment

உப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன்.

இணைச் செயலாளர்களாக பி. செல்வராஜ், பி.வி. ரமணன், ஆர். செல்வராஜ், பி. பாஸ்கர், ஜோனா பக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலிலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்துபேரில் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், தினா, குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.